Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான ஜிலேபி செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
புளித்த இட்லி மாவு - ஒரு கப்
கேசரி பவுடர் - 1/2 ஸ்பூன்
மைதா மாவு - 1
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
 
பாகு தயாரிக்க:
 
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 1 கப்
எலுமிச்சை - 1/2

செய்முறை:
 
முதலில் 2 அல்லது 3 நாள் ஆட்டி நன்கு புளித்த அரிசி மாவு வேண்டும். அதில் கேசரி பவுடரை நிறத்திற்காக சேர்த்துக்கொள்ளவும். அதன்பின் அதில் மைதாமாவு சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு கரைத்துக்கொள்ளவும். இதற்கிடையே பாகு தயாரிக்க தண்ணீர் சர்க்கரை ஊற்றி கொதிக்க வையுங்கள்.
 
அதில் எலுமிச்சை சாற்றை பிழியவும். தற்போது கரைத்து வைத்துள்ள மாவை கோதுமை கவர் அல்லது ஏதேனும் உணவு பாக்கெட் இருந்தால், மாவை ஊற்றி கீழே ஒரு சிறிய துளை செய்யுங்கள்.
 
பாத்திரத்தில் எண்ணெய்யை விட்டு காய்ந்ததும் மாவை இரண்டு சுத்து முறுக்கு போல் சுற்றி எடுங்கள். பின் பொண்ணிறமாக வந்ததும் அப்படியே எடுத்து சர்க்கரை பாகுவில் போட்டு எடுக்கவும். 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். நீண்ட நேரம் ஊறவிட்டால் மொறுமொறுப்பு போய்விடும். அவ்வளவுதான் சுவையான ஜிலேபி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments