Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புதமான சுவையில் பால் கொழுக்கட்டை செய்ய !!

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (14:58 IST)
தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி மாவு  - 2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்  (முதல் பால்)
தேங்காய்ப்பால் - தேவைக்கு (இரண்டாவதாக எடுக்கும் பால்)
பால் - 3 கப்
சர்க்கரை  - 3 கப்
ஏலக்காய் - 4
முந்திரி, திராட்சை - தேவைக்கு ஏற்ப
நெய் - 5 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப



செய்முறை:

பாலை நன்றாகக் காய்ச்சவும். அரிசி மாவில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தனியே எடுத்துவிட்டு மீதமுள்ள மாவில் காய்ச்சிய பாலை விட்டு, சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக நீண்ட வடிவத்தில் பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, சர்க்கரை கரைய வைத்து நீர்த்த பாகாக்கவும்.

பிறகு எடுத்து வைத்த அரிசி மாவை சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும். சிறிது கெட்டியாக பாயசம் போலவரும், இச்சமயம் ஆவியில் வேக வைத்ததைப் போட்டு கிளறிவிடவும். பின்னர், பால், தேங்காய்ப்பால்  முதல் மற்றும் இரண்டாம் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காயைப் பொடி செய்து போட்டு இறக்கி வைக்கவும். நெய்யையும் ஊற்றி மூடி வைக்கவும். அவ்வளவுதான் அற்புதமான சுவையில் பால் கொழுக்கட்டை தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments