Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த பாசிப் பருப்பு அல்வா செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பாசிப் பருப்பு - அரை கப்
நெய் - அரை கப்
சர்க்கரை - 200 கிராம்
கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை:
 
முதலில், பாசிப் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அத்துடன் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவிடவும். பருப்பு நன்றாக ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில், கால் கப் நெய் போட்டு உருகியதும், முந்திரிப் பருப்பு சேர்த்து வறுத்து தனியாக எடுக்கவும். அதே நெய்யில், கோதுமை மாவு சேர்த்து நன்றாக வறுக்கவும். அத்துடன், அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு, சர்க்கரை  சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
 
பின்னர், மீதமுள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். இறுதியாக, வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறினால் சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments