Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான சுவையான மைசூர் பாகு செய்ய !!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (16:48 IST)
தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 3 கப்
தண்ணீர் - 1 கப்



செய்முறை:

கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும்.

ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்). கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும். அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும்.

மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விடவேண்டும். அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.

குறிப்பு: பாகு சரியான பதம் எடுத்தால் மட்டுமே அதன் ருசியை முழுவதுமாக பெற முடியும். கொஞ்சம் பாகு பதம் வருவதற்குள் எடுத்துவிட்டால் மைசூர் பாகு அல்வா போல் இருக்கும். கொஞ்சம் பாகு பதம் கூடி எடுத்து விட்டால் கல் போல் மாறி விடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

குங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியமான தகவல்..!

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments