தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது வழக்கம். கடந்த தேர்தலில் நடிகர் விஷால் வெற்றி பெற்ற தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் விஷாலின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிருப்தி கோஷ்டியினர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
விஷால் பூட்டை உடைக்க முயன்று கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் 27 பேருக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நூலில் விஷால் தலைமையிலான புதிய நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இந்த நிலை
யில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மார்ச் மாதம் 3-ஆம் தேதி சென்னை ராமாபுரத்தில் நடக்கிறது. இது சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தும் தேதியை முடிவு செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் மீண்டும் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. அவர் எழுத்து பாரதிராஜா டி ராஜேந்தர் ஆகியோர் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.