Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாளத்தில் குட்டி ஜானு ! – கதாநாயகியான கௌரி கிஷன்

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2019 (09:02 IST)
96 படத்தில் பதின்பருவ ஜானுவாக நடித்த கௌரி கிஷன் ஒருப் புதியப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலிஸான 96 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வழக்கமான மசாலா அம்சங்கள் எதுவும் இல்லாமல் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, சிறுவயது ராம் ஜானுவாக நடித்த ஆதித்யா மற்றும் கௌரியின் நடிப்பும் ஆகும்.

இதையடுத்து படம் ரிலிசாகி 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இன்னமும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் 96 படக் காதல் காட்சிகளின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதனையடுத்து சிறுவயது ஜானுவாக நடித்த கௌரி இப்போது மலையாளப் படமொன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குநர் பிரின்ஸ் ஜாய் இயக்கும் புதிய மலையாளப் படத்தில் சன்னி வேயின் என்றப் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்கு அனுகிரஹித்தன் அந்தோனி’  எனப் பெயரிடப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள கௌரி கிஷன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments