Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன வந்ததும் காணாப்போயிட்டாரு… எதிர்நீச்சல் சீரியலில் என்னதான் நடக்குது?

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (14:31 IST)
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டது. சமீபத்தில் இந்த சீரியல் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியல் 500 ஆவது எபிசோட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் தமிழில் அடைந்த வெற்றியை அடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி என ஐந்து மொழிகளில் டப் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த சீரியலின் இமாலய வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் அதில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் அட்டகாசமான நடிப்புதான். அவர் சமீபத்தில் மறைந்ததை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் சீரியலில் மொத்தமே அவர் இதுவரை 2 நாட்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளார். வந்ததும் அவரை போலீஸ் கைது செய்து அழைத்து சென்றுவிட, போலீஸ் ஸ்டேஷனிலும் அவரைக் காணவில்லை. இதனால் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து சீரியலை முன் நகர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments