Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்…!

Advertiesment
கவுண்டமணி

vinoth

, திங்கள், 5 மே 2025 (12:56 IST)
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருப்பவர் கவுண்டமணி.  80கள் மற்றும் 90களில் அவர் இல்லாத ஹிட் படங்களே இல்லை எனும் நிலையில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தார்.

2000களின் மத்தியில் உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகள் படம் நடிக்காமல் இருந்தார் கவுண்டமணி. அதன்  பிறகு 49 0 மற்றும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். கடைசியாக‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தில் நடித்தார்.

கவுண்டமணி நட்சத்திர நடிகராக இருந்தாலும், அவர் தன்னுடையக் குடும்ப வாழ்க்கையை சினிமாவில் இருந்து விலக்கி வைத்திருந்தார். அவரின் குடும்பத்தினர் யாரும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொண்டதில்லை. இந்நிலையில் அவரின் மனைவி சாந்தி இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவரது வயது 67. கவுண்டமணி- சாந்தி தம்பதியினருக்கு செல்வி மற்றும் சுமித்ரா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கில் கால்பதிக்கும் சூரி… முதல்முறையாக இருமொழிப் படம்!