Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளியை அடுத்து பொங்கலுக்கும் துண்டு போட்டு வைக்கும் கார்த்தி!

தீபாவளியை அடுத்து பொங்கலுக்கும் துண்டு போட்டு வைக்கும் கார்த்தி!
, புதன், 11 அக்டோபர் 2023 (07:51 IST)
கார்த்தி இப்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தை முடித்துள்ளார். அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் ஜப்பான் படமும், அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கும் படமும் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இதில் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளதாகவும், அவருக்குள் எம் ஜி ஆர் வந்துவிடுவது போன்ற சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாம். சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமென இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இயக்குனர் பாலாவின் வணங்கான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தள்ளிப்போகும் கமல்-ஹெச் வினோத் திரைப்படம்… பின்னணி என்ன?