Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்.. பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வருமா?

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (10:37 IST)
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ் திரை உலக சங்கங்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சற்றுமுன் அவர் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 கடந்த சில நாட்களாக த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறையினர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
இந்த நிலையில் த்ரிஷா குறித்து தான் உள் அர்த்தத்துடன் எதுவும் பேசவில்லை என்றும் எனவே மன்னிப்பு கேட்க முடியாது என்றும் மன்னிப்பு கேட்கும் பரம்பரை கிடையாது என்றும் வீராவசமாக சமீபத்தில் அவர் பேட்டி அளித்திருந்தார். 
 
இந்த நிலையில் தற்போது அவர் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர் இது குறித்து கூறியதாவது:
 
எனது சக திரைநாயகி திரிஷாவே
என்னை மன்னித்துவிடு!
இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன். " 
 
---மன்சூர் அலிகான்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்
Show comments