Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த நடிகர் பிரபாஸ்

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (13:36 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ் இன்று திருப்பதி கோவிலில் தரிசனம் செய்தார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர்,. ராஜமெளலி இயக்கத்தில் உருவான பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். அதன்பின்னர், இந்தியா முழுவதும் அவர் பிரபலமானார்.

பாகுபலி படத்திற்குப் பின் அவர் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்களாகக உருவாகி வருகின்றன.  அவரது சம்பளமும் அதிகரித்துள்ளது.

ஆனால், பாகுபலி படத்திற்குப் பின் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், தற்போது ஆதிபுரூஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளார்.

இப்படம் ரூ. 600 பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், விரைவில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நேற்று பிரபாஸ் திருப்பதி கோயிலுக்கு சென்று, அதிகாலை சுப்ரபாத ஏழுமலையானை வழிபட்டார். அதன்பின்னர், சாமி கும்பிவிட்டு வெளியே வந்த அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்களுக்கு கை அசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

ஆதிபுரூஸ் படம் வரும் 16 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ள நிலையில், இப்பட டீசரின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments