Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் உடல் நிலை விவரம்: அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Siva
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (17:18 IST)
நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் என்ன பிரச்சனை மற்றும் அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் கண்டறியப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர் சாய் சதீஷ் அவர்கள் இந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்து, ஸ்டெண்ட் வைத்தார்.

இந்த சிகிச்சை முடிந்த நிலையில், ரஜினி ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால், திட்டமிட்டபடி அவரது சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது, மேலும் ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து, ரஜினியின் உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாகவும், விரைவில் அவர் பூரண குணமடைந்து விடுவார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஷ்ணு விஷால்& ஜ்வாலா கட்டா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது!

விஜய் சேதுபதி நடித்த ஃபார்சி வெப் தொடரின் இரண்டாம் பாக அப்டேட்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தை ரிலீஸ் செய்யும் துல்கர் சல்மான்..!

என் தோழி மிகவும் அழகானவர்: நெருக்கமான தோழியை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை..

நேரில் ஆஜராக வேண்டும்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments