Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

Siva
வியாழன், 15 மே 2025 (18:36 IST)
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண விழாவில், நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிற ஆடையில் கலந்து கொண்டது சமூகவலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தனது வருத்தங்களை பகிர்ந்திருந்தார். இதன் பின்னணியில், விமர்சனங்கள் மேலும் பரவ ஆரம்பித்தன.
 
இந்நிலையில், நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கெனிஷா தான் தனது வாழ்க்கைத் துணை எனத் தெரிவித்துள்ளார். அதில், “கெனிஷா என் தோழியாக இருந்தவர், இப்போது என் வாழ்வின் உண்மையான துணையாகி விட்டார். நான் மனைவியிடமிருந்து மட்டும் விலகுகிறேன், எனது குழந்தைகள் அல்ல,” என குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், “என் கடின தருணங்களில் எனக்கு துணையாக இருந்தவர் கெனிஷா. என் குழந்தைகளை சந்திக்கவே முடியாத நிலை உள்ளது. எனது குடும்ப விவகாரங்களை வைத்து நிதி ஆதாயம் தேடும் முயற்சிகள் நடக்கின்றன. மனைவியின் செலவுகள் காரணமாகவே நான் கடனில் சிக்கியேன். ஐந்து ஆண்டுகளாக நான் சம்பாதித்த பணம் என் பெற்றோரிடம் செல்லவில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எனது குழந்தைகளை வைத்து நிதி ஆதாயம் அடைய முயற்சி செய்கின்றனர். எனது குழந்தைகளை பார்க்க விடாமல் பவுன்சர்கள் தடுக்கின்றனர். * பொன் முட்டையிடும் வாத்தாகவே நான் பார்க்கப்பட்டேன், ஒரு கணவனாக நான் மதிக்கப்படவில்லை.
 
இவ்வாறு ரவிமோகன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

சர்ச்சைக்குரிய பாடலை நீக்கிய சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படக்குழு!

அடுத்த கட்டுரையில்