கோலமாவு கோகிலா படம் மூலமாக அறிமுகமான நடிகர் ரெட்டின்ஸ் கிங்ஸ்லிக்கு டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
இயக்குனர் நெல்சனின் நீண்ட கால நண்பரும் தொழில் முனைவோருமான ரெட்டின்ஸை கோலமாவு கோகிலா படத்தில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்திலேயே அவர் நடித்த டோனி கதாபாத்திரம் கவனத்தை ஈர்த்தது. அதன் பின்னர் அவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் நடித்த டாக்டர் படத்தின் மூலம் ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளார். இதனால் அடுத்தடுத்து பல பெரிய படங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்திலேனி நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.