Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா, விஷ்ணு விஷாலை அடுத்து உதயநிதியிடம் நிவாரண நிதி கொடுத்த சூரி... எவ்வளவு தெரியுமா?

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (13:40 IST)
தமிழக அமைச்சர் உதயநிதியிடம் திரையுலக பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சூர்யா மற்றும் கார்த்தி பத்து லட்ச ரூபாய் கொடுத்த நிலையில் அதனை அடுத்து சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து தலா ரூபாய்  10 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளித்தனர். 
 
இதனை அடுத்து தற்போது நடிகர் சூரி தனது பங்காக அமைச்சர் உதயநிதி இடம் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இது குறித்து அமைச்சர் உதயநிதி தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிக்ஜாம் புயல் – கன மழை நிவாரணப் பணிகளுக்கு துணை நிற்கின்ற வகையில், சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 
 
அந்த வகையில், திரைப்பட நடிகர் சகோதரர் சூரி மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக  ‘தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்’ என பதிவு செய்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments