Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பெயரில் ஏமாற்றுவேலை நடிகர் சூரி அதிர்ச்சி

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (18:45 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான சூரி  தன்பெயரில் வெளியாகியுள்ள விளம்பரம் ஒரு ஏமாற்று வேலை என எச்சரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக் குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலம் ஆனவர் சூரி. இதையடுத்து, ஜில்லா, வருத்தபடாத வாலிபர் சங்கம் என்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தின் ஷீட்டிங் நடந்து வரும் நிலையில், சமூக வலைதளத்தில் ஒரு சூரியைப் பற்றிய விளம்பரம்   ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சூரி நடத்தி வரும் அறக்கட்டளை சார்பில் மேல்படிக்க விரும்பும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொலை வழங்கப்படும் என விளம்பரம் உருவாக்கப்பட்டு, அதில் அவரது படமும் இடம்பெற்றிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சூரி, இது ஒரு போலியான விளம்பரம் இதை வைத்து சம்பாதிக்கும் உள் நோக்கத்துடன் யாரோ மர்ம நபர்கள் செயல்பட்டுள்ளனர். இவர்கள் மீதது காவல்துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் சூரி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட் … தமன்னா க்யூட் ஆல்பம்!

மரூன் கலரில் வித்தியாசமான உடை… ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

கமல் & அன்பறிவ் சகோதரர்கள் இணையும் படம் தொடங்குவது எப்போது?

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

அடுத்த கட்டுரையில்
Show comments