Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் கமிட்டி அழைப்பை ஏற்ற நடிகர் சூர்யா…. வைரல் ட்வீட்!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (09:08 IST)
அமெரிக்காவில் வழங்கப்படும் அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது உலக புகழ்பெற்ற ஒன்று. பலகாலமாக இந்த விருதை பெற இந்திய சினிமா முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரை போற்று ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னாள் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று இருந்தது, பின்னர் வெளியேறியது.  அதே போல சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படமும் ஆஸ்கர் கமிட்டியின் யுடியூப் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு  2022 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 397 பேரில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது. புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமியில் சேர நடிகர் சூர்யாவுக்கும் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கௌரவத்தைப் பெற்றுள்ள சூர்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த அழைப்புக் குறித்து நடிகர் சூர்யா தற்போது ட்வீட் செய்துள்ளார். அதில் “ஆஸ்கர் கமிட்டியின் அழைப்பை பணிவோடு ஏற்கிறேன். எனக்காக வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரையும் பெருமைப் பட வைப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments