Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை வாரிய சங்கங்கள் - வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கிய விஷால்

Webdunia
ஞாயிறு, 21 மே 2017 (21:35 IST)
பல்வேறு சினிமா சங்கங்கள் ஒத்துழைக்க மறுத்ததால், திரைத்துறை சார்பில் வருகிற 30ம் தேதி நடக்கவிருந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை, நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் ரத்து செய்துள்ளார்.


 

 
திருட்டு விசிடி ஒழிப்பு, சேவை வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30ம் தேதி முதல் சினிமா துறை சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும், அதன்படி சினிமா படப்பிடிப்பு தொடர்பான பணிகள் எதுவும் நடைபெறாது எனவும் விஷால் தெரிவித்திருந்தார்.
 
ஆனால், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர முடியாது என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கம் என ஏற்கனவே அறிவித்துவிட்டன. இந்நிலையில், தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தர முடியாது என அறிவித்து விட்டது.
 
இப்படி சினிமா துறையை சேர்ந்த பல்வேறு சங்கள், ஆதரவு தராத காரணத்தினால், வருகிற 30ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விஷால் அறிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments