Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“முதல் முறையாக நான் பொறாமைப் படுகிறேன்…” பொன்னியின் செல்வன் குறித்து மீனா பதிவு!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (08:05 IST)
நடிகை மீனா பொன்னியின் செல்வன் திரைப்படத்தினைப் பற்றி பதிவிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயைப் பார்த்து தான் பொறாமைப்படுவதாக நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “இனிமேலும் என்னால் உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது. வாழ்க்கையில் முதல் முறையாக நான் ஒருவரைப் பார்த்து பொறாமைப் படுகிறேன். அது ஐஸ்வர்யா ராய். ஏனென்றால் என்னுடைய கனவு பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

100 கோடி ரூபாய் வசூலை எட்டிய சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம்!

ரொமாண்டிக் கதையில் சந்தானம்… இயக்குனராக கௌதம் மேனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments