Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை பிரியங்கா சோப்ராவின் 'டீப் ஃபேக்' வீடியோ

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (15:19 IST)
நடிகை  பிரியங்கா சோப்ராவும் டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஏஐ தொழில் நுட்பம் வளர்ச்சி என்பது மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது. பளுவை குறைக்கிறது. பல புதிய விஸ்யங்களுக்கு உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் ஒருவரின் குரலில் பேசுவது. பாடுவது, டீப் பேக் வீடியோ, மார்பிங் புகைப்படம் என்று பல விஷங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

சமீபத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ராஷ்மிகா, அமிதாப், உள்ளிட்ட சினிமாத்துறையினர் கண்டனம் தெரிவித்தனர்.

இன்று கஜோல், கரீனா கபூரில் டீப் பேக் வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கும் சினிமா துறையினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவும் டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா சோப்ரா இதற்கு முன் பேசிய ஒரு வீடியோவில் அவரது முகத்தை மாற்றாமல், குரலை மாற்றி பதிவிட்டுள்ளார்.

இதில், ஒரு போலி  நிறுவனத்தை விளம்பரம் செய்வது போல் அவர் பேசுவதாகவும் அவர் தனது வருமானத்தை தெரிவிப்பது  போலவும்  இந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.

இதனால் மற்ற நடிகைகளும் அச்சமடைந்துள்ளனர்.

சமீபத்தில் பிரதமர் மோடி கர்பா  நடனம் ஆடுவது போன்ற  போலி  வீடியோ வைரலான நிலையில் ‘ஏஐ, டீப்பேக் தொழில்  நுட்பங்களின் அபாயம் கவலையளிக்கிறது’ என பிரதமர் மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் பதற்றம் எதிரொலி: ’தக்லைஃப்’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமல்..!

ஐசரி கணேஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகி கென்னிஷாவுடன் கலந்துகொண்ட ரவி மோகன்!

அட்லி &அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறாரா சமந்தா?... அவரே அளித்த பதில்!

பிரபல ஓடிடியில் ரிலீஸான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் ஜோடியாகும் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments