Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணா நகரில் நடிகையின் செல்போன் பறிப்பு

Webdunia
ஞாயிறு, 24 ஜூன் 2018 (13:08 IST)
சென்னை அண்ணா நகரில் சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனா சிங்கிடம் மர்ம நபர்கள் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ரேனிகுண்டா, அஞ்சான், மீகாமன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சஞ்சனா சிங், தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
 
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் அவர், தினமும் காலை சைக்கிளிங் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி நேற்று அதிகாலை சைக்கிளிங் செய்துள்ளார். 
அண்ணா நகர், சிந்தாமணி சிக்னலில் சஞ்சனா தனது  போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், திடீரென சஞ்சனா சிங் வைத்திருந்த போனை பறித்து சென்று தப்பினார். மர்ம நபரை பிடிக்க முயன்றும் சஞ்சனாவால் முடியவில்லை.
 
இதனையடுத்து சஞ்சனா  அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸார் செல்போன் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments