Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது மட்டும் ஓகே ஆச்சுன்னா நாளைக்கே திருமணம் தான்.! நடிகை திரிஷா பேட்டி.!

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (15:41 IST)
திரிஷா சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக  வலம் வந்த திரிஷா,  பல புதுமுகங்களின் வரவால் அவருடைய மார்க்கெட் டல்லடித்தது. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தவருக்கு அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை. 
 

 
பிறகு தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையில் காதல் என தென்னிந்தியாவில் கிசுகிக்க அவர்களோ நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி எஸ்கேஎப் ஆகினர். ஆனால், திரைப்பட விழாக்கள், திரையுலக விழாக்கள், விருதுவிழாக்கள்  என அனைத்திலும்  இருவரும் ஜோடியாக வந்து சென்றனர். 
 
த்ரிஷாவின் திருமணம் பாதியிலே நின்றபோது  ராணா – த்ரிஷா பற்றிய காதல் செய்திகள் றெக்கை கட்டி பறக்க பறந்தது. ஆனாலும் மூச்சு கூட விடாமல் ரகசியத்தை பாதுகாத்துவந்தார் திரிஷா. 
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று திரிஷா தனது திருமணம் குறித்து பேசுகையில், இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால்  உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments