அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் லைகா நிறுவனத்தின் பொருளாதார காரணங்களால் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு குட் பேட் அக்லி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஜூனில் தொடங்கும் என சொல்லப்பட்டது.
ஆனால் மே 9 ஆம் தேதியே ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோ ஆக்ஷன் காட்சியோடு தொடங்கியது. இரண்டு நாட்கள் நடந்த ஷூட்டிங் மக்களவைத் தேர்தல் காரணமாக பிரேக் விடப்பட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ள ஷூட்டிங் ஜூன் 7 ஆம் தேதி வரை நடக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது. அதன் பின்னர் அஜித் விடாமுயற்சி ஷூட்டிங்க்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.