Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் 62 படத்தின் கெட்டப் இதுதானா?- ரசிகர்களோடு அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (14:34 IST)
துணிவு படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அஜித் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாகவும், குடும்ப செண்ட்டிமெண்ட் உணர்வுகளுக்கு இந்த படம் அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அஜித் தற்போது ரசிகர்களோடு சென்னை விமான நிலையத்தில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தில் அஜித் லேசான தாடியோடு இருப்பதைப் பார்த்து, இதுதான் அஜித்தின் கெட்டப்பா எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments