Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன்னுடைய முன்மாதிரி கார் ரேஸ் வீரருக்கு பாதங்களில் முத்தமிட்டு மரியாதை செலுத்திய அஜித்!

Advertiesment
அஜித்

vinoth

, புதன், 21 மே 2025 (09:57 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.

தற்போது கார் ரேஸ் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித் சினிமாவிற்கு எப்படி நேரம் ஒதுக்கப் போகிறார் என்பது குறித்தக் கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனாலும் ஆண்டுக்கு ஒரு படம் தன்னிடம் இருந்து வரும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது கார் ரேஸில் தன்னுடைய ரோல் மாடலான மறைந்த அயர்டன் சென்னாவுக்கு அஜித் மரியாதை செலுத்தியுள்ளார். இத்தாலியில் உள்ள அவரது நினைவகத்துக்கு சென்ற அஜித் அவர் சிலையின் பாதங்களில் முத்தமிட்டு மரியாதை செலுத்தியுள்ளார். பிரான்ஸைச் சேர்ந்த சென்னா 1994 ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்ட போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரமாண்ட படம் என்பது ஒரு ஏமாற்று வேலை.. அதில் நான் சிக்க மாட்டேன்: விஜய் சேதுபதி