Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் விடா முயற்சி படத்தில் டபுள் சர்ப்ரைஸ்..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (08:11 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

துணிவு படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது. அது ரிலீஸாகி 5 மாதங்கள் ஆகியும் இன்னும் அடுத்த படம் தொடங்கப்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் இப்போது அஜித் ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஆகஸ்ட் மாதத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கடைசியாக அஜித் 2010 ஆம் ஆண்டு வெளியான அசல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments