தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.
தற்போது கார் ரேஸ் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித் சினிமாவிற்கு எப்படி நேரம் ஒதுக்கப் போகிறார் என்பது குறித்தக் கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுபற்றி அவரே தன்னுடைய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் “அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு என்னைப் புரிந்துகொண்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. தரமான படங்கள் என்னிடம் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும். என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸாகும்” எனக் கூறியுள்ளார்.