மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் குட்னைட் மற்றுன் லவ்வர் ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக டூரிஸ்ட் பேமிலி படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. படம் ரிலீஸாகி ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்த நிலையில் இதுவரை 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
முதல் நாளில் 2 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த நிலையில் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் 2 கோடி ரூபாய்க்குக் குறையாமல் வசூலித்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மட்டும் சுமார் 5 மற்றும் 6 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. அதற்கடுத்த வேலை நாட்களிலும் 2 கோடி ரூபாய்க்குக் குறையாமல் வசூலித்து வருகிறதாம்.
இந்த ஏகோபித்த வரவேற்புக் காரணமாக இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஆகியுள்ளது டூரிஸ்ட் பேமிலி. இதையடுத்து வரும் 24 ஆம் தேதி ஜப்பானில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.