Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியில் தனக்கென்று மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்ட அல்லு அர்ஜுன்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (14:50 IST)
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா பேன் இந்தியா படமாக வெளியானது.

டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் வசூலில் சோடை போகவில்லை. இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தி வெர்ஷன் முதல் வார இறுதி நாட்களில் மட்டும் 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதையடுத்து வரிசையாக வசூல் குறையாமல் அதிகமாகிக் கொண்டே சென்றது. இந்நிலையில் இப்போது வரை மொத்தமாக 62 கோடி ரூபாய் இந்தியில் மட்டும் வசூல் செய்துள்ளதாம். இது மிகப்பெரிய வசூல் என வட இந்திய ஊடகங்கள் ஆச்சர்யத்தில் உள்ளன. அதனால் இனிமேல் அல்லு அர்ஜுனின் எல்லா படங்களுக்கும் இந்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பான் இந்தியா சினிமா என்பதே ஒரு மோசடிதான்… இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் காட்டமான விமர்சனம்!

பாலிவுட்டில் தொடர் தோல்வி... ஹாலிவுட் செல்லும் கங்கனா!

ஆயிரம் கோடி அடிக்கும் முடிவில் ‘கூலி’ மற்றும் ‘தக்லைஃப்’… ஓடிடி வியாபாரத்தில் எடுத்த அதிரடி முடிவு!

“ரஜினி, கமல் சேர்ந்து நடிக்க ஒரு கதை ரெடி… ஆனால்” –லோகேஷ் பகிர்ந்த தகவல்!

தீபாவளி ரேஸில் இணைந்த ப்ரதீப் ரங்கநாதனனின் ‘DUDE’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments