Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் படத்துக்கு அமேசான் ப்ரைம் கொடுத்த ஆஃபர்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (17:55 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்துக்கு அமேசான் ப்ரைம்  42 கோடி ரூபாய் அளவுக்கு ஆஃபர் கொடுத்துள்ளதாம்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் தேர்தல் காரணமாக ரம்ஜான் பண்டிகையான மே 14 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை அனுமதி, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் டாக்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது மிகப்பெரிய சிக்கலாகியுள்ளது. அதனால் ஓடிடி ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அமேசான் ப்ரைம் டாக்டர் படத்துக்கு 42 கோடி ரூபாய் தருவதாக சொல்லியுள்ளதாம். இந்த பெரிய தொகையால் தயாரிப்பாளர் ஓடிடிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளதாம். இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments