Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு நாயாட்டு ரீமேக்கில் நடிக்கும் அஞ்சலி!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:24 IST)
மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற நாயாட்டு திரைப்படம் இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த படத்தின் பெருவெற்றி  தடுக்கப்பட்டது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகி கேரளா தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தில் நடித்த குஞ்சாக்கா போபன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் நிமிஷ விஜயன் ஆகியோர் பாராட்டுகளைப் பெற்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதே போல தெலுங்கில் அல்லு அர்ஜுனின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும், இந்தியில் நடிகர் ஜான் ஆப்ரஹாமும் ரீமேக் உரிமைகளை வாங்கியுள்ளார்களாம்.

இந்நிலையில் தெலுங்கு ரீமேக் பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதில் நிமிஷா விஜயன் நடித்த கதாபாத்திரத்தில் அஞ்சலில் நடிக்க தேர்வாகியுள்ளாராம். மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அனிருத்தை கடத்திட்டுப் போய்.. அரண்மனையில வெச்சு..!?- விஜய் தேவரகொண்டாவின் ஆசை!

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments