Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அண்ணாத்த’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (22:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் 
 
இந்த நிலையில் படக்குழுவினர்களிடம் இருந்து வந்த தகவலின் படி ஜூன் 4-ஆம் தேதி ’அண்ணாத்த’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த பாடல் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் பாடிய கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஜூன் 4-ஆம் தேதி என்பது எஸ்பிபி அவர்களின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பாடல் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments