Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''இரவின் நிழலில் ''பிறந்த நாள் கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான் !

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (23:20 IST)
''இரவின் நிழல்'' என்ற படக்குழுவினரருடன் இணைந்து ஏ. ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில்  இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். இன்று தனது 55 வது பிறந்த நாளை இரவின்  நிழல் படக்குழுவவினருடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார்.  இந்த வீடியோவை நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையும் ‘லெஜண்ட்’ ஒளிப்பதிவாளர்!

‘அஜித்தின் அடுத்தப் படம் ஆதிக்குடன்தான்’… உறுதியாக சொல்லும் தயாரிப்பாளர்!

‘இளையராஜா பணத்தாசைப் பிடித்தவர் இல்லை.. அவர் கேட்பது இதுதான்’ … விஜய் ஆண்டனி ஆதரவு

சூர்யாவும் இல்ல.. தனுஷும் இல்ல… என் வீட்டுக்காரர்தான் முதலில் சிக்ஸ் பேக் வச்சார்- பிரபல் நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments