Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரண்மனை 4 ரிலீஸில் இருந்து விலகியதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

vinoth
செவ்வாய், 19 மார்ச் 2024 (08:16 IST)
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்கி ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பின்னர் சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யலாம் என படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் இப்போது பொங்கலுக்கு அதிக படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆவதாலும், படத்தின் வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தாலும், ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. ஏப்ரலில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வதாக இருந்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாம். அதற்குக் காரணம் அரண்மனை 4 படத்தில் பாஜக பிரமுகரான ஏ சி சண்முகம் முதலீடு செய்துள்ளார் என்பதால் தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

அடுத்த கட்டுரையில்
Show comments