ஆர்யா நடித்து தயாரிக்கும் புதிய படத்துக்கு கேப்டன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் டெடி படம நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து அவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் பூஜையோடு தொடங்கியுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, சிம்ரன் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல இந்த படமும் சயின்ஸ்பிக்ஷன் கதையாக உருவாகி வருகிறது.
கேப்டன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம். இந்நிலையில் முழுப்படத்தையும் முடித்து கோடைவிடுமுறைக்கு படத்தை கொண்டுவர உள்ளதாம் படக்குழு.