Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண தேதி இதுதான்: திருமணம் எங்கே தெரியுமா?

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (13:24 IST)
பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்ய இருப்பதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த திருமண தேதி குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. 
 
நடிகர் அசோக் சொல்லன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தை அருண்பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் நடத்த திட்டம் இடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமண தேதி மற்றும் பிற விபரங்கள் அதிகாரபூர்வமாக அருண்பாண்டியன் தரப்பிலிருந்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாக்கி வரும் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தில் சாந்தனு பாக்கியராஜ் பிரத்வி பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடிப்பு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
செப்டம்பர் மாதம் இந்த  படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அதே செப்டம்பர் மாதம் தான் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் திருமணம் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்