‘லப்பர் பந்து’ படத்துக்குப் பிறகு 100 கதைகளை வேண்டாம் என்றேன் – தினேஷ் சொல்லும் காரணம்!

vinoth
வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (11:39 IST)
அட்டக்கத்தி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ். அதன் பின் குக்கூ, விசாரணை, கபாலி மற்றும் பல்லு படாம பாத்துக்க உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஆனாலும் அட்டகத்தி மற்றும் விசாரணை அளவுக்கு எந்த படமும் வெற்றிபெறவில்லை.

இதற்கிடையில் அவருக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு திருப்புமுனையாக அமைந்தது ‘லப்பர் பந்து’ திரைப்படம். அந்த படத்தில் அவர் நடித்த கெத்து பாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பால் அட்டகத்தி தினேஷ் என்ற அவரது திரைப்பெயரே ‘கெத்து’ தினேஷ் என மாறியது.

தற்போது அவர் தண்ட காரண்யம் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் செப்டம்பர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இது சம்மந்தமான ப்ரமோஷனுக்காக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “லப்பர் பந்து படத்துக்குப் பிறகு 100 கதைகளாவது கேட்டிருப்பேன். ஆனால் எதுவுமே அமையவில்லை. எனக்கு வேண்டாம் என்றால் அதை சிரித்துக் கொண்டே சொல்லிவிடுவேன். என் விருப்பத்தை இயக்குனர்களிடம் நான் முன்னரே தெளிவாக சொல்லிவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை சம்யுக்தாவுக்கு 2வ்து திருமணம்.. மணமகன் கிரிக்கெட் குடும்பத்தை சேர்ந்தவரா?

அவர் என் எல்லாமும்: இந்த வெற்றிடம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்: கணவர் தர்மேந்திரா குறித்து ஹேமாமாலினி!

ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியா… இல்லை கான்செர்ட்டா?.. குழம்பும் ரசிகர்கள்!

அந்த வார்த்தையை எல்லாம் படத்தில் வைக்க முடியாது… சென்ராயனுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments