Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அளவில் அவதார் 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (17:26 IST)
அவதார் 2 திரைப்படம் இந்தியாவில் நேற்று ரிலீஸ் ஆனது. இதையடுத்து இந்தியாவில் முதல் நாள் வசூல் விவரம் தெரியவந்துள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. இன்று வரை உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையும் அவதார் வசம் உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

இந்த படம் டிசம்பர் 16ல் வெளியான நிலையில் படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே தொடங்கியது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சில திரையரங்குகளில் அவதார் 2 திரையிடப்படவில்லை. இந்நிலையில் இப்போது இந்தியாவில் அவதார் 2 திரைப்படம் முதல் நாளில் வசூலித்த தொகை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. முதல் நாளில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் இந்தியாவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments