பாகுபலி The Epic டீசர் ரிலீஸ்… ரசிகர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

vinoth
திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (10:57 IST)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும் தங்கள் எல்லைத் தாண்டி பேன் இந்தியா அளவுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்போடு படங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால் பேன் இந்தியா சினிமா என்ற புதிய வகையினமே உருவாகியுள்ளது.

இந்த பேன் இந்தியா சினிமா என்ற வகைமையை உருவாக்கியதில் முன்னத்தி ஏர் என்று எஸ் எஸ் ராஜமௌலியை சொல்லலாம். அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.

இந்நிலையில் பாகுபலி படத்தின் முதல் பாகம் ரிலீஸாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அதன் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே பாகமாக ரி ரிலீஸ் செய்யவுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ‘பாகுபலி-The epic” என்ற பெயரில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக எஸ் எஸ் ராஜமௌலி அறிவித்துள்ளார்.

இதற்கான படத்தொகுப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசர் வார் 2 மற்றும் கூலி ஆகிய படங்களோடு சேர்ந்து திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ லான்ச்!.. வெளியான வீடியோ!...

நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது: விக்ரமுக்கு வார்னிங் கொடுத்த பிரஜின்..!

தமன்னாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படத் தொகுப்பு!

மாளவிகா மோகனின் வித்தியாச உடை போட்டோஷூட் ஆல்பம்!

உருவாகிறது ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’… ஹீரோ சாண்டி மாஸ்டரா?

அடுத்த கட்டுரையில்
Show comments