Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணங்கான் படத்தில் இயகுனர் பாலா பயன்படுத்திய விண்டேஜ் பாடல்… அடுத்த vibeக்கு தயாரா?

vinoth
புதன், 24 ஜூலை 2024 (16:38 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல கவனத்தை ஈர்த்தது. வசனங்கள் இன்றி விறுவிறுப்பான காட்சிகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த டீசர் இதுவரை 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு வணங்கான் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை காட்டுகிறது. 

இந்நிலையில் வணங்கான் படத்தில் இயக்குனர் பாலா ஒரு காட்சியில் பழைய பாடல் ஒன்றைப் பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என்று, ராம்கி நடித்த உளவாளி என்ற படத்தில் இடம்பெற்ற ‘மொச்சகொட்ட பல்லழகி’ என்ற பாடலை பயன்படுத்தியுள்ளார். அந்த காட்சிகள் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அமரன் படத்தின் நடிகர் தேர்வு தவறென்று முதலில் நினைத்தேன்… இயக்குனரைப் பாராட்டிய ஞானவேல் ராஜா!

சென்னையின் கூட்ட நெரிசலானப் பகுதிகளில் கூலி ஷூட்டிங்கை நடத்தும் லோகேஷ்!

பாலிவுட்டில் அவர எல்லோரும் ஒதுக்குனாங்க… கங்குவா வில்லன் குறித்து சூர்யா பகிர்ந்த சம்பவம்!

அடுத்தடுத்து பெரிய இயக்குனர்கள்… சிவகார்த்திகேயன் போடும் மாஸ்டர் ப்ளான்!

அடுத்த கட்டுரையில்
Show comments