Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது நடிகரின் குரல் இல்லை மனதின் குரல்: சூர்யா அறிக்கைக்கு பாரதிராஜா பாராட்டு

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (07:50 IST)
பிரபல நடிகர் சூர்யா நேற்று நீட்தேர்வு குறித்தும், நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்தது குறித்தும் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார் என்பதை பார்த்தோம். இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
சூர்யாவுக்கு ஆதரவாக ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதனை சூர்யா ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சூர்யாவின் அறிக்கைக்கு எதிராக கண்டன கருத்துக்களும் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சூர்யாவின் அறிக்கைக்கு பல திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சூர்யாவுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:
 
ஒவ்வொரு வரிகளிலும் தம்பி சூர்யா ஓர் தகப்பனாராக கூறியுள்ளார். இது நடிகரின் குரல் இல்லை மனதின் குரல் என்று பாரதிராஜா தனது டுவிட்டரில் கூறியுள்ளார் பாரதிராஜாவின் இந்த டுவிட்டுக்கு சூர்யா ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்த டுவிட்டர் பக்கம் பாரதிராஜாவின் போலி டுவிட்டர் பக்கம் என்றும், அவர் சூர்யாவின் அறிக்கை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments