Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்கள் படையெடுப்பு - பரபரப்பை கிளப்பும் பிகில் இசை வெளியீட்டு விழா!

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (18:00 IST)
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 


 
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அண்மையில் இப்படத்தில் இடப்பெறும் "சிங்கப்பெண்ணே" மற்றும் வெறித்தனம் என்ற இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதையடுத்து நேற்று "உனக்காக" என்ற ரொமான்டிக் பாடலை வெளியாகி ரெண்டாகி வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதற்காக ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு அங்கு படையெடுக்க போகும் வழியெல்லாம் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. வாகனங்களை நிறுத்துவதற்கு கூட இடமில்லாமல் வழியெங்கும் கார் , பைக் என நிறைந்து காணப்படுகிறது. இந்த நிழ்ச்சியில் விஜய்யின் மேடை பேச்சை கேட்பதற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். மேலும் இதில் அரசியல் வருகை குறித்த கருத்து நிச்சயம் இடம் பெரும் . கூடுதலாக அண்மையில் பேனர் சரிந்து உயிரிழந்த சுபஸ்ரீ இறப்பை கருத்தில் கொண்டு "இனி தனக்கு பேனர் வைக்கவேண்டாம்" என தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைப்பார் என எதிர்பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments