Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்: சிக்கிய வாலிபர் - தீவிர விசாரணை!

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (13:52 IST)
நடிகர் விஜய் தனது குடும்பத்தினருடன் சென்னனை அருகே உள்ள பனையூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள காவல்துறையின் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் போன் செய்து நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் அது சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்றும்  கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார்.  

 
இதையடுத்து விஜய் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை செய்து பார்த்ததில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரைண மேற்கொண்டனர். இதையடுத்து இது வெறும் வதந்தி என்று தெரியவந்தது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க சைபர் குற்றப்பிரிவு போலீசார் துரிதமாக விசாரணை நடத்தியதில் சென்னை போரூர் அருகில் உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் என்பது கண்டறியப்பட்டது. 
 
அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தியதில்,  அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருகிறாராம். அண்மையில் தான் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் ரிலீசாகியது. இதனால் விஜய் ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments