Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவாரா பும்ரா?... பிசிசிஐ இன்று முடிவு!

vinoth
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (08:02 IST)
பும்ரா  இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக இருந்து வருகிறார். பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரில் அவர் மட்டும் இல்லாது போயிருந்தால் இந்திய அணி படுமோசமான தோல்வியைப் பெற்றிருக்கும். ஆனால் அவருக்கு பக்கபலமாக யாரும் இல்லாததால் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோற்றது.

அந்த தொடரில் 32 விக்கெட்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இதன் மூலம் தற்காலக் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவராக உருவாகியுள்ளார். ஆனால் அவரின் தனித்துவமான பவுலிங் ஆக்‌ஷன் காரணமாக அடிக்கடி காயமடைந்து வருகிறார். அத்தொடரின் இறுதிப் போட்டியில் காயம் காரணமாக அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலாவது அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று அது பற்றி பிசிசிஐ முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் காயம் காரணமாக இப்போது அவர் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments