Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு....நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (13:19 IST)
லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை இன்னும் ஏன் செலுத்தவில்லை என்று நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடன் விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறியதாக நடிகர் விஷாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முழுமையான தகவல்களை நடிகர் விஷால் தாக்கல் செய்யவில்லை என லைகா தரப்பு புகார் செய்தது.

இதனையடுத்து சொத்து விவரங்களை தாக்கல்  செய்ய நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவர் சமீபத்தில் தனது சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்ததாகத் தகவல்  வெளியானது.

இந்த நிலையில், லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை இன்னும் ஏன் செலுத்தவில்லை என்று நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், 2021 ஆம் ஆண்டில் ரூ 80 கோடிக்கு விஷால் பணப்பரிவர்த்தகம் செய்துள்ளார். ஆனால், எங்களுக்கு வேண்டுமென்றே எங்களுக்குச் செலுத்த  வேண்டிய தொகையைத் தராமல் உள்ளார் என லைகா தரப்பு வாதம் செய்துள்ளது.

இதற்கு, பணத்தை தர தயாராக இருப்பதாகவும், ஆனால், லைகா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என விஷால் தரப்பில் வாதம் செய்தனர்.

எனவே இவ்வழக்கு வரும் நவம்பர் 1 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments