Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (15:06 IST)
மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. லூசிபர் என்ற பெயர் காட்பாதர் என மாற்றப்பட்டுள்ளது. மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

மேலும் பிருத்விராஜ் நடித்திருந்த வேடத்தில் நடிக்க சல்மான் கான் நடித்துள்ளார். சல்மான் கான் நடிக்கும் நேரடி முதல் தென்னிந்திய மொழி திரைப்படமாக காட்பாதர் அமைந்துள்ளது. சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. இந்த திரைப்படம் அக்டோபர் 5 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை முன்னணி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரஞ்சீவி தொடர்ந்து தோல்வி படங்களைக் கொடுத்து வரும் நிலையில் இந்த படத்தை பெரியளவில் நம்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments