நாகார்ஜூனா படம் ரீரிலீஸ்.. சிரஞ்சீவியிடம் மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா.. என்ன காரணம்?

Mahendran
ஞாயிறு, 9 நவம்பர் 2025 (15:59 IST)
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் முதல் மற்றும் இந்திய சினிமாவில் திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படமான 'சிவா' வரும் நவம்பர் 14-ஆம் தேதி புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் மறுவெளியாகிறது. இதில் நாகார்ஜூனா, அமலா ஆகியோர் நடித்திருந்தனர்.
 
மறுவெளியீடு குறித்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி வீடியோ வெளியிட்டு படத்தைப் பாராட்டியிருந்தார்.  சிரஞ்சீவியின் பாராட்டிற்கு பதிலளிக்கும் வகையில் ராம் கோபால் வர்மா பதிவிட்டதில், "நன்றி சிரஞ்சீவி அவர்களே, நான் தெரியாமல் எப்போதாவது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்" என்று எதிர்பாராதவிதமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
 
முன்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவே, வர்மா இவ்வாறு மன்னிப்பு கோரியதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
புதுமையான தொழில்நுட்ங்களால் அமைந்த இந்த படம், இன்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு முக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன ஏன் தல மேல தூக்கி வச்சுக் கொண்டாடுறாங்க… அடுத்த சர்ச்சையைக் கிளப்பிய ராஜகுமாரன்!

எல் ஐ கே ரிலீஸில் இருந்த குழப்பம்… புத்திசாலித் தனமாக தப்பித்த தயாரிப்பாளர் லலித் குமார்!

கருப்பு படத் தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிய ’சூர்யா 46’ தயாரிப்பு நிறுவனம்!

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments