Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசேதான் கடவுளடா… முட்டிக்கொண்ட இயக்குனரும் கதாநாயகனும்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:07 IST)
காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக் தொடங்கிய வேகத்தில் ஒரு மாதத்துக்குள்ளாகவே முடிந்தது.

கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா என்ற திரைப்படத்தின் ரீமேக் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே மாதத்தில் முடிவடைந்து உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முத்துராமன் காரணிகள் மிர்ச்சி சிவா, எம்.ஆர்.ஆர் வாசு கேரக்டரில் யோகிபாபு, லட்சுமி கேரக்டரில் பிரியா ஆனந்த் நடித்துள்ள இந்த படத்தில் புகழ், ஷிவாங்கி, ஊர்வசி , கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்தை ஆர் கண்ணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்றும் வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது இயக்குனர் கண்ணனுக்கும் கதாநாயகன் மிர்ச்சி சிவாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்படுகிறது. அணுகுவதற்கு மிகவும் இனிமையானவரான மிர்ச்சி சிவா இயக்குனரோடு சண்டை போட்டுள்ளார் என்ற செய்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐசரி கணேஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகி கென்னிஷாவுடன் கலந்துகொண்ட ரவி மோகன்!

அட்லி &அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறாரா சமந்தா?... அவரே அளித்த பதில்!

பிரபல ஓடிடியில் ரிலீஸான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் ஜோடியாகும் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி!

சூர்யா & ஆர் ஜே பாலாஜி படத்தின் தலைப்பு இதுதானா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments