Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமீன்.. நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (12:38 IST)
பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் சமீபத்தில்  கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

2 வாரங்களில் ரூ.5 கோடிக்கு உத்தரவாதத்தை செலுத்த ரவீந்தர் சந்திரசேகரருக்கு நிபந்தனை நீதிமன்றம் விதித்தது. மேலும் ரவீந்திரனின் வங்கி கணக்கில் இருந்து பல பண பரிவர்த்தனைகள் நடைபெற்றது என்றும், ஆனால் இவை அனைத்தும் இந்த வழக்கு தொடர்புடையதா? என தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளதால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மீது சென்னையைச் சேர்ந்த  பாலாஜி என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு லிப்ரா புரோடக்ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் குறித்து கூறியதாகவும், இதன் மதிப்பு ரூ.200 கோடி என்று கூறி அதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறி, போலியான ஆவணங்களைக் கொடுத்து என்னை ரூ.16 கோடி முதலீடு செய்ய வைத்தார் என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் சொன்னதுபோல் எந்த திட்டத்தையும் துவங்காமல், தனது பணத்தையும் திருப்பித் தராததால் அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் ரவீந்தரை போலீசார் கைது செய்தனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அமரன் படத்தின் நடிகர் தேர்வு தவறென்று முதலில் நினைத்தேன்… இயக்குனரைப் பாராட்டிய ஞானவேல் ராஜா!

சென்னையின் கூட்ட நெரிசலானப் பகுதிகளில் கூலி ஷூட்டிங்கை நடத்தும் லோகேஷ்!

பாலிவுட்டில் அவர எல்லோரும் ஒதுக்குனாங்க… கங்குவா வில்லன் குறித்து சூர்யா பகிர்ந்த சம்பவம்!

அடுத்தடுத்து பெரிய இயக்குனர்கள்… சிவகார்த்திகேயன் போடும் மாஸ்டர் ப்ளான்!

அடுத்த கட்டுரையில்
Show comments