Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசூலில் சறுக்கிய கஸ்டடி… முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?

Webdunia
சனி, 13 மே 2023 (15:48 IST)
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்த கஸ்டடி திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது.காவல்துறை அதிகாரியாக நாகசைதன்யா நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார் என்பதும் மேலும் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் முறையாக தெலுங்கு பக்கம் ஒதுங்கியுள்ள இந்த படத்துக்கு தமிழ் சினிமாவிலும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்குக் காரணம் வெங்கட்பிரபுவின் கடைசி படமான மாநாடு படத்தின் அதிரி புதிரி ஹிட்தான் காரணம். அப்படி நம்பி சென்ற ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றியுள்ளதாம் கஸ்டடி திரைப்படம். படத்தில் ஒரு நிமிடம் கூட ரசிக்கும் படியாக எதுவுமே இல்லையாம். வழக்கமாக வெங்கட் பிரபு யுவன் கூட்டணியில் பாடல்கள் ஹிட்டாகும். இந்த முறை இந்த கூட்டணியோடு இளையராஜா சேர்ந்தும் கூட பாடல்களும் ஹிட்டாகவில்லை என்பது ரசிகர்களுக்கு கூடுதல் வேதனை.

இந்த படம் தெலுங்கிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. உலகளவில் இந்த படம் முதல் நாளில் 4 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் வசூல் பிக்கப் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments